free website hit counter

The Recce :  ஒரு வேளை, இஸ்ரேல் உகண்டாவில் இருந்திருந்தால் ! 

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குறுந்திரைப்படங்கள் செய்வது மிக கடினமானது. அதிலும் ஆவணக்குறுந்திரைப்படங்கள் மிக கடினமானது. கதையை யதார்த்த சூழலில், இயல்பாக என்ன நடைபெறுகிறதோ அதை அப்படியே சொல்ல வேண்டும். ஆனால் அதை ஒரு 30 நிமிடங்களுக்குள் சொல்லியும் முடிக்க வேண்டும். 

அது இலகுவானதல்ல. அப்படி ஒரு குறுந்திரைப்படம் செய்ய நினைக்கையில், படத்தின் மையக்கதை, அது நடைபெறும் சூழல், அரசியல் விவாதங்கள் காரணங்களுக்காக அப்படம் உருவாக்குவதற்கு நிதியுதவி  வழங்குவதற்கு அரச பின்புலம் மறுத்துவிட்டால், அப்படத்தின் உருவாக்கத்தை கைவிடவேண்டியது தான். 

இவ்வாறான சூழலில் உருவான ஒரு குறுந்திரைப்படம், தனது சமார்த்தியமான கதை சொல்லலின் ஊடாக, செய்து முடிக்கப்பட்டு, பேர்லின் திரைப்பட விழா போன்று பெரிய ஒரு திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு, Vision du Reel திரைப்பட விழாவுக்கு வரும் போது அதை பார்க்கும் எண்ணம் அதிகமாகனது. 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் 2026 ஏப்ரல் 16 முதல் 26 வரை, நடைபெறும் மிகப்பெரும் சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவான visionsdureel 57வது பதிப்பில்,  இடம் பிடித்த அந்தப் படத்தின் பெயர் The Recce. Daniel Mann இயக்கத்தின், ஜேர்மனி, இங்கிலாந்து இணை தயாரிப்பில் உருவான இக்குறுந்திரைப்படம் 15 நிமிடங்கள் மாத்திரமே கொண்டது. 

1904ம் ஆண்டு, பிரித்தானிய காலனித்துவ அதிகாரிகளினால், ஊக்குவிக்கப்பட்டு, ஆதரவு வழங்கப்பட்ட யூதக் குழு (Zionist Organisation), உகண்டாவின் மலைக்காடுகளுக்கு இரகசியமாக அந்த நிலத்தை பரிசீலினை செய்ய வந்திருக்கிறது. 

இஸ்ரேல் அப்போது பாலஸ்தீன நிலத்தில் இன்னமும் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. உகண்டாவின் மண், அதன் தாவரங்கள், அதன் நீரின் ஆரோக்கியம், சுற்றுச் சூழலின் ஆரோக்கியம் அனைத்தும் யூதர்களுக்கென ஒரு நிலத்தை உருவாக்குவதற்கு ஏற்றதா என பரிசீலனை செய்யும் முகமாக வந்திருந்த குழு அது. அப்படி காலனித்துவம் செய்யும் நோக்கில் முகாமிடுபவர்களையே தென் நாடுகளின் Slang மொழிகளில் The Recce என்பர். 

இப்படி ஒரு யூதக் குழு வந்து சென்றதற்கான வரலாற்று ஆதாரங்களும், புகைப்பட ஆதாரங்களும் கையில் கிடைக்க, உகண்டாவின் அந்த மலைக்காடுகளின் குளிர் பிரதேசத்தை நோக்கி, 2026 இல் நகரும் திரைப்பட இயக்குனர் அந்த மண்ணை படம்பிடிக்கின்றார். அதை வைத்து ஒரு படம் செய்வதற்கு உதவ முடியுமா என இந்த வரலாற்றை தெரிந்த ஒருவரிடம் உரையாடுகிறார். அவர்களது மின் அஞ்சல் உரையாடல்களின் தொகுப்பை,  அந்த மலைக்காடுகளின் காட்சிகளின் முன்னால், ஓடவிடுகின்றார்.

15 நிமிடங்களுக்கு அந்த மழைக்காடுகளின் காட்சிகளும், அந்த மின் அஞ்சல் உரையாடலும் மாத்திரமே எம் கண் முன் வந்து செல்கின்றன. யூதர்கள் ஏன் உகண்டா நிலத்தை முதலில் தெரிவு செய்தனர். அந்த நிலத்தின் முக்கியம் என்ன, பின்னர் ஏன் அதை கைவிட்டு, பாலஸ்தீனியத்தை நோக்கி சென்றனர் என அவ்வளவும் அந்த மின் அஞ்சல் உரையாடலில் வந்து செல்கின்றது. 

15 நிமிடங்கள் பார்த்து முடிக்கையில், இன்று நடைபெறும் இஸ்ரேலிய-பாலஸ்தீன போர், யூதர்களுக்கு நடந்த கொடுமையை மறந்து, அவர்களால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளின் அகோரம் எங்கு தொடங்கியிருக்கும் என கேள்விகளுக்கு, பதிலாக வந்து செல்கிறது.

இந்த திரைப்படத்திற்கு பண உதவி எதுவும் கிடைக்கவில்லை. ஏன் என்பது உலகத்துக்கே தெரிந்திருக்கும். ஆனாலும், இயக்குனரின் சமார்த்தியம், அந்த மின் அஞ்சல் உரையாடல்களையும், அந்த நிலப்பரப்பின் காட்சிகளையும் மாத்திரமே வைத்து படத்தை உருவாக்கி சொல்ல வந்த கருத்துக்களையும் சொல்லி முடித்துவிட்டார். அங்கேதான் சினிமாவின் சக்தி அசாத்தியமானது என்னும் யதார்த்தம் வெளிப்படுகிறது.


https://www.visionsdureel.ch/en/film/2026/the-recce/


-4தமிழ்மீடியாவுக்காக: நியோனிலிருந்து ஸாரா 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: