2026 Vision du Reel திரைப்படவிழாவின் 57 பதிப்பில், வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில், முதன்மையான நடுவர் குழு விருதை, 20,000 சுவிஸ் பிராங்களுடன் ஸ்பானிய-சீன இயக்குனர் Xisi Sofia Ye Chen பெற்றுக்கொண்டார். அவருடைய ஆவணத்திரைப்படம் From Dawn to Dawn, ஸ்பானியாவின் பார்சிலோனாவில் இருக்கும் சீனப் புலம்பெயர் சமூகத்தின் வாழ்வை பிண்ணணியாக கொண்டது.
ஸ்பானிய மொழி, மேண்டரின், சீன டயேலெக்டுடன் கூடிய உள்ளூர் மொழிகளின் கலப்பில் உருவான இந்த ஆவணத்திரைப்படத்தில், இதன் இயக்குனர் Xisi, தனது 38 வயது சகோதரரையே முக்கிய கதாபாத்திரமாக தொடர்கிறார். வறுமை, பலனவீனமான பொருளாதாரப் பிண்ணணி கொண்ட பெற்றோர், குடும்பச்சூழல் மத்தியில் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடிய அவரது சகோதரர், பல வன்முறைகளில் ஈடுபட்டு, துப்பாக்கிச் சூடு வரை சென்று, பின் கேங்க்ஸ்டராக, பணப்பரிமாற்றம், சீட்டாட்டம் என்பவற்றில் ஈடுபட்டு, ஒரு கட்டத்தில் இவற்றையெல்லாம் வெறுத்து, அதற்கான தண்டனையையும் சிறைக்கு சென்று அனுபவித்து வந்ததன் பின்னர், எப்படி நான்கு உண்வகங்களை திறந்து நடத்த தொடங்குகிறார், அவரது திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கை என்ன, அவருடைய ஆன்மீகத் தேடல் என்ன என்பவற்றை நோக்கி படம் நகர்கிறது.
ஒரு பக்கம், அவர்களது குடும்பத்தின் வன்முறைக் கலாச்சாரம், அவரையும், அவரது நண்பர்களையும் எப்படி மாற்றுகிறது, அவரது சகோதரியாக தான் வளர்ந்து வந்த சமூகம் எப்படிப்பட்டது என்பதனையும் தனது குரல் பதிவில் சொல்லிக்கொண்டே வருகிறார். வன்முறை கலாச்சாரத்தை போற்றிப் பாடாமலும், ஆனால் ஏன் அவர் அப்படி ஆனார், அதிலிருந்து மீளத்துடிக்கும், அமைதியான மனிதராக எப்படி மாறி வருகிறார், அல்லது மாற முயற்சிக்கிறார் என அனைத்தும் மெல்லிய கவிதையாக காட்சிப்படுத்தியிருப்பார் Xisi. இவ்வளவும் ஒரு ஆவணத்திரைப்படத்தின் அம்சங்களுக்கு உள்ளேயே தொடர்வார்.
அப்பிரதான கதாபாத்திரத்தில் வரும் இயக்குனரின் சகோதரியின் முகம் எப்போதும், எந்தவொரு உணர்ச்சிகளையும் இலகுவில் வாசித்துவிட முடியாதளவு, தனது கடந்தகால வன்முறை போக்கிலிருந்து மீளத் துடிப்பது மாத்திரமே இலக்காக கொண்டிருப்பதாக தோன்றும். படம் தொடங்கிய முதல் காட்சிகள், சீன ஆன்மீக சரணாலயம் ஒன்றில், அவரது சகோதரர், அமைதியாக தியானிப்பது, சமைப்பது, விவசாயம் செய்வது என அனைத்தும் வந்து போகும். தனக்கும், தனது சகோதரருக்கும் இடையில் சிறுவயது உறவு எப்படி இருந்தது என்பதை சகோதரி வர்ணித்து கொண்டே வருவார். படம் செல்லச் செல்ல, அவரது ஸ்பானிய வாழ்க்கை எப்படியானது, அவரது நண்பர்கள்யார், அவருடைய கடந்த கால தொழில் என்ன, அவரினது மனத்தடுமாற்றம் என்ன, அவரது கடையில் வேலை செய்யும் நபர்களின் மனத்தடுமாற்றம் என்ன அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விரியும்.
இயக்குனரின் கமெரா பல இடங்களில், Plan Sequence வடிவில், இடையில் நிறுத்தாமல், பல நிமிடங்களுக்கு உரையாடல்களை மெல்லிய Camera Fram அசைவுடன் உருவாக்கியிருப்பார். அதற்கு ஏற்றது போல் இசையும் வந்து செல்லும். படம் முடிவடையும் போது, God Father திரைப்படத்தை ஒரு ஆவணத்திரைப்படமாக பார்த்தால் எப்படி இருக்கும் என்பது போல் ஒரு உணர்வு வந்து போகும். அந்தளவு துல்லியமாக, வன்முறைக் கலாச்சாரத்தின் நுணுக்கங்களை, முக உணர்வுகளில் மாத்திரம் படம்பிடித்திருப்பார் Xisi.
https://www.visionsdureel.ch/film/2026/from-dawn-to-dawn/
நியோன் சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் வரிசையில், சிறந்த தேசிய போட்டிப் பிரிவுக்கான விருதை Nicole Nicole திரைப்படம் வென்றது. Special Mention விருதை Der Tisch Ronde வென்றது. இவ்விரு திரைப்படங்களையும் பற்றிய விமர்சனங்களையும், எமது தளத்தில் நீங்கள் காணலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: நியோனிலிருந்து ஸாரா
Visions du Reel 2026 festival Festival winners
International Feature Film Competition
Grand Jury Award – From Dawn To Dawn, dir. Xisi Sofia Ye Chen
Special Jury Award – A Fire There, dir. Marlene Edoyan
Special mention – Djeliya, mémoire du Mandé, dir. Boubacar Sangare
Burning Lights Competition
Jury Prize – Alea Jacarandas, dir. Hassen Ferhani
Special Jury Award – Baby Jackfruit Baby Guava, dir. Nong Nhat Quang
Special mentions – The Case Against Space, dir. Graeme Arnfield; Illusion of Quiet Night, dir. Olga Chernyk
National Competition
Jury Prize – Nicole Nicole, dir. Lauren Dallenbach
Special Jury Award – What Comes From Sitting In Silence, dir. Sophie Schrago
Special mention – Der Runde Tisch, dirs. Juliette Menthonnex, Benjamin Bucher
Audience Award in Wide Angle Competition – Birds Of War, dirs. Janay Boulos, Abd Alkader Habak
Fipresci Award – Saudades Eternas, dir. Emma Bofanccuso
Prix Interreligieux – Dentro, dir. Elsa Amiel
Perception Change Award – Good Valley Stories, dir. Jose Luis Guerin
