free website hit counter

என்ன தான் சொல்கின்றன கனவுகள்...?

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 சென்ற கட்டுரை தொடர்ச்சி..... அவிழப்போகும் மர்மங்களுக்காய் காத்திருக்கும் வாசகர்களுக்காக..

நாள்முழுக்க ஓடிக்களைத்தவனுக்கு இரவின் மடி உறக்கத்தை பரிசளிக்கிறது ஓய்வுக்காக. உறக்கத்தின் போது எம் உடலும் மனமும் அமைதி அடைகிறது. படுத்ததும் உறங்கிப்போவதே இந்த அவசர உலகில் எத்தனையோ பேரின் தவமாக இருக்கிறது.

இது இப்படியிருக்க உறங்கும் போது நாம் எல்லோரும் கனவுகளில் சஞ்சரிக்கிறோம். உடல்,மனம் மற்றும் உயிர் ஆகியன சங்கேதயமாக தொடர்புகொள்ளும் நிலைமையையே கனவு என்கிறோம். ஆனால் இந்த கனவுகள் உறக்கத்தின் எந்த படிநிலையில் வருகிறதென்று எம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்..? "என்னது, உறக்கத்தின் படிநிலைகளா?" என வியப்பாக இருக்கிறதா..?  வாருங்கள் பார்க்கலாம்..!

கனவுகள் பற்றிய தெளிவொன்றை பெறுவதற்கு இந்த உறக்கத்தின் படிநிலைகள் குறித்த விளக்கம் அவசியமே. பொதுவாக நாம் உறங்கிப்போகையில் 04 படிநிலைகளில் மாறி மாறி சுழற்சிமுறையில் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
 
படிநிலை 1.
விழிப்பு நிலையில் இருந்து தூக்க நிலைக்கு மாறும்போதுள்ள நடுநிலையை படிநிலை 1 ஆக கருதப்படுகிறது. இது Non REM (Rapid Eye Movement) வகையைச்சேர்ந்தது.
 
படிநிலை 2.
உடலின் வெப்பநிலை குறைந்து, தசைகள் தளர்வடைந்து ஓய்வுநிலையில் இருக்கும் Non REM வகையை சேர்ந்த இந் நிலைமை  படிநிலை 2 ஆக கருதப்படுகிறது.

 படிநிலை 3.
இதுவும் Non REM வகைக்குட்பட்டதே. இப் படிநிலையின்போது நாம் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திற்குச்செல்கிறோம்.

 படிநிலை 4.
REM வகையைச்சார்ந்த இப் படிநிலையிலேயே பெரும்பாலும் கனவுகள் வருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படிநிலையில் நமது கண்கள் விரைவாகவும் அப்படியும் இப்படியும் அசைந்து கொண்டிருக்கும். இவ்வேளையில் ஒருவரை எழுப்பினால் அவர் அப்போது கண்ட கனவுகளை தெளிவாக நினைவில் வைத்திருப்பார்.

நாம் தூங்கும் போது இந்த நான்கு படிமுறைகளும் சுழற்சி முறையில் மாறிக்கொண்டே இருக்கும். இவற்றில் முதல் மூன்று படிநிலைகளை விடவும் 4ம் படிநிலையிலேயே அதிக நேரம் நாம் தூங்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நாம் உறங்க ஆரம்பித்து 30 - 90 நிமிடங்களுக்குப்பிறகே கனவுகள் ஆரம்பிக்கின்றன. ஒரு இரவில் 4 இலிருந்து 7 தடவைகள் வரை நாம் REM படிநிலையில் இருக்கிறோம். இவ்வேளையிலும் உடலும் உடற்தசைகளும் முழுமையான ஓய்வெடுத்தாலும் இந்த REM படிநிலையில் மனம் முழு செயல்பாட்டில் இருப்பதாக அறியப்படுகிறது.

மனிதர்கள் உறங்கிப்போனாலும் மனங்கள் உறங்கிப்போவதில்லை போலும்!
 
மர்மங்கள் அவிழும்..

 Mahi...✍?

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction