free website hit counter

மூலிகை அறிவோம் - மணக்கும் ஏலம் துரத்தும் நோய்கள்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மணக்கும் ஏலம் துரத்தும் நோய்கள்

இது தென்னிந்தியாவின் பல பாகங்களில் பயிரிடப்படுவதோடு இலங்கையின் உயர் நிலங்களிலும் பயிர்செய்யப்படுகின்றது. பெரிய ஏலம், காட்டு ஏலம், மலை ஏலம் எனப் பல வகைகள் இருப்பினும் சிற்றேலமே அதிக மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது.

தாவரவியல் பெயர் - Elettaria repens
குடும்பப் பெயர் - Zingiberaceae
ஆங்கிலப் பெயர் -cardamom
சிங்களப் பெயர் - Ensal
சமஸ்கிருதப் பெயர் - Upakunchika
வேறு பெயர்கள் - ஆஞ்சி, கோரங்கம், துடி

பயன்படும் பகுதிகள்
விதை

சுவை - கார்ப்பு
வீரியம் - வெப்பம்
விபாகம் - கார்ப்பு

வேதியியற் சத்துகள் Volatile oil
Starch

மருத்துவச் செய்கைகள்
Aphrodisiac- இன்பம்பெருக்கி
Aromatic- வாசனையுண்டாக்கி
Astringent -துவர்ப்பி
Anti emetic- வாந்தியை தடுக்கும்
Carminative- அகட்டுவாய்வகற்றி
Diuretic -சிறுநீர் பெருக்கி
Emmenogogue- ருதுவுண்டாக்கி
Stimulant- வெப்பமுண்டாக்கி
Stomachic- பசித்தீத்தூண்டி

தீரும் நோய்கள்
இருமல், கோழை, சலபேதி, வயிற்றுக் கொதிப்பு, வாயில் நீரூறல், வாயினிப்பு, தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வரட்சி, நீர்ச்சுருக்கு, ருசியின்மை

பயன்படுத்தும் முறைகள்
ஏலம், அதிமதுரம், நெல்லி, சந்தனம், வால்மிளகு இவைகளின் சூரணம் வகைக்கு 35 g சர்க்கரை 85 g சேர்த்துக் கலந்து 2-4 g கொடுக்க இருமல், வரட்சி, தாகம், வயிற்று வலி முதலியன நீங்கும்.

ஏலரிசி, இலவங்கப்பட்டை, முந்திரி, திப்பிலி வகைக்கு 210 g அதிமதுரம், சர்க்கரை, பேரீச்சு வகைக்கு 105g இவைகளை ஒன்றுபட இடித்துச் சூட்டுடன் இருக்கும்போதே கழற்சிக்காய் அளவு மாத்திரை செய்து 1,2 கொடுக்க அக்னி மாந்தம், வயிற்றுவலி, பொருமல், பேதி, பித்தாதிக்கம் போகும்.

ஏலப்பொடி 280 g பசுப்பால் 1.4 l பசுநெய் 1.4 l இளநீர் 700 l இவைகளை கூட்டிக் காய்ச்சிப் பக்குவத்தில் வடித்து அதில் வால்மிளகுத் தூள் 35 g, சாதிக்காய், சாதிபத்திரி, கராம்பு, சுக்கு, கொத்துமல்லி, கொப்பரை, திராட்சை வகைக்கு 9 g கற்கண்டு 840 g சேர்த்து உபயோகிக்க தாகம், வரட்சி, கபம், வயிறு சம்பந்தமான பிணிகள் விலகும். தேகம் குளிர்ச்சியடையும். பித்தஞ் சாந்தியாகும். இரத்தம் பெருகும்.

ஏலக்காய் 8 g பனைவெல்லம் 20 g சேர்த்து 350 l நீர்விட்டு காய்ச்சிக் கொடுக்க பித்தத்தால் உண்டாகும் தலைமயக்கம் நீங்கும்.

ஏலரிசி, சுக்கு இலவங்கம், சீரகம் இவை சமனெடை எடுத்து பொடித்துத் தூளாக்கி 2 g வீதம் கொடுத்துவர வயிற்றுவலி, குன்மம் குணமாகும்.

ஏலரிசி, ஓமம் ,சீரகம் இவை சமனெடை எடுத்து இளவறுப்பாய் வறுத்துப் பொடித்து அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து உட்கொள்ள அஜீரணம் நீங்கும்.

காட்டு ஏலக்காயை கஷாயமிட்டு வாய் கொப்பளித்து வர வாய் நாற்றம், பல் அரணை, ஈறு புண் முதலியன மாறும்.

காட்டு ஏலக்காய் ஒரு பங்கு வெள்ளரி விதை 2 பங்கு சேர்த்து கஷாயமிட்டு 40 ml வீதம் கொள்ள சிறுநீரைப் பெருக்கி நீரடைப்பைப் போக்கும். பித்தத்தை அதிகரிக்கும். வலப்பாட்டீரல் நோயை குணமாக்கும்.
1-2 g வரை உட்கொள்ள தலைவலி தீரும்.

முன்னோர் எமக்கு கற்றுக்கொடுத்த இயற்கையின் கைம்மருந்துகளை எந் நாளும் மறவாமல் நம் வாழ்விலும் கையாண்டு இளந் தலைமுறைக்கும் கற்றுக் கொடுப்போமாக!

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction