free website hit counter

காலாவதியாகும் 4G

தொழில்நுட்பம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் முக்கியமான ஒரு திருப்புமுனை 5G ஆகும். சில காலங்களுக்கு முன்பதாக அதிக அளவில் பேசப்பட்ட ஒரு வார்த்தைதான் 5G. அந்த 5G என்றால் என்ன? அந்த 5Gல் என்ன தான் உள்ளது?
5 Generation என்பதன் சுருக்க வடிவமே 5G என்று அழைக்கப்படுகின்றது. தகவல் தொடர்பாடல் ஆனது 1G 2G 3G 4G ஆகிய கட்டங்களின் ஊடாகவே தற்பொழுது 5G எனும் தொழில்நுட்பத்தை அடைந்துள்ளது. 5ஜி பற்றிய அறிமுகத்திற்கு முன்பதாக முதலில் பயன்பாட்டில் இருந்த 1G 2G 3G 4G ஆகிய தொழில்நுட்பங்களைப் பற்றி சிறிது பார்க்கலாம். தொடர்பாடலின் முதலாம் அத்தியாயம் ஆகிய 1G தொழில்நுட்பத்தின் மூலமாக இரு சாதனங்களுக்கு இடையிலான குரல் மூலமான தொடர்பாடல் உறுதி செய்யப்பட்டது(Voice call). 1G தொழில்நுட்பத்தின் அடுத்த அத்தியாயம் ஆகிய 2ஜி தொழில்நுட்பத்தின் மூலம் மெசேஜ் எனும் வசதி மேலதிகமாக பெறப்பட்டது. அடுத்த கட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட 3ஜி தொழில் நுட்பத்தின் மூலம் கையடக்கத் தொலைபேசிகளில் இணையம் பயன்படுத்தக்கூடிய அடிப்படை வசதி உருவாக்கப்பட்டது. அதிகளவான இணைய வேகம் இல்லாத பொழுதிலும் இன்றைய கையடக்க தொலைபேசிகளில் அதிவேக இணையத்திற்கான அடித்தளம் 3ஜி மூலமே பெறப்பட்டது. 3G இன் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட அடுத்த கட்ட தொடர்பாடல் தொழில்நுட்பம் தான் 4G. 4G தொழில்நுட்பம் மூலம் அதிவேக இணையம் உறுதி செய்யப்பட்டதுடன் இணையத்தின் மூலம் அதிகளவான தகவல் பரிமாற்றத்தை இலகுவாக செய்யக் கூடியதாக அமைந்தது. 4G இன் அடுத்த கட்டமாக பல சர்ச்சைகள் உடன் அறிமுகம் செய்யப்பட்டது தான் 5G. முன்பு இருந்த இணைய வேகத்திலும் பார்க்க இருபது மடங்கு அதிகமான வேகம் 5G தொழில்நுட்பத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதிக அளவான மீடிறன் கொண்ட அலைகளை 5ஜி தொழில்நுட்பத்தில் பயன்படுத்துகின்றனர் இதன் மூலமாக அதிவேக இணையத்தை உறுதி செய்யக்கூடியதாக அமைந்தது. மீடிறன் அதிகரிப்பின் காரணமாக தொடர்பாடலுக்கு பயன்படுத்தப்பட்ட அலைகளால் அதிக அளவு தூரம் பயணிக்க முடியவில்லை. மரங்கள், கட்டடங்கள் ,மழை மற்றும் சாரீரப்பதன் போன்ற பௌதிக காரணிகளினால் இவ்வாறான அலைகள் பாதிப்படைந்தன. இதன் காரணமாக தகவல் தொடர்பாடல் பாதிப்படைந்தது. இதற்கான ஒரு சிறந்த தீர்வாக 5G தொழில்நுட்பத்திற்கு பொருத்தமான சிறியரக Antenna கள் குறைந்த தூரங்களுக்கு இடையிலே பொருத்தப்பட்டு அவற்றின் பயணத்தை உறுதி செய்தன. இதன் காரணமாக இடையூறுகளின் மூலம் உருவான அலைகளின் பாதிப்பு நிவர்த்தி செய்யப்பட்டது. மேலதிகமாக அவ்வாறு பொருத்தப்பட்ட சிறிய ரக Antenna களில் வழமைக்கு மாறாக அதிக அளவிலான தகவல் பரிமாற்றத்தை செய்யக்கூடிய சாதனங்கள் பொருத்தப்பட்டன. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவிலான சாதனங்களின் தகவல் பரிமாற்றத்தை நிகழ்த்தும் வல்லமை இந்த சிறிய ரக Antennaளுக்கு கிடைத்தது. சிறிய ஒரு பிரதேசத்தில் அதிக அளவிலான சாதனங்கள் பொருத்தப்பட்டதன் காரணமாக அலைகளுக்கு இடையிலான மோதுகைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் தகவல் பரிமாற்றம் பாதிப்படையலாம். இதற்கான ஒரு தீர்வாக அலைகளை எல்லாத் திசைகளிலும் கடத்துவதற்கு பதிலாக குறிப்பிட்ட சாதனத்தை மட்டும் நோக்கியவாறு அலைக்கற்றைகள் செலுத்தப்படுகின்றது. இதனால் பரவலாக அலைக்கற்றைகள்(Beam) செலுத்தப்படுவது தவிர்க்கப்படுகின்றது இதன்பொருட்டு அலைகளுக்கு இடையிலான மோதல்கள் தவிர்க்கப்பட்டு தகவல் தொடர்பாடல் இன் வினைத்திறனும் அதிகரிக்கப்படுகிறது. இதற்காகவே சிறியரக Antenna கள் முக்கோண வடிவில் எல்லா திசைகளை நோக்கியவாறும் அமைக்கப்பட்டுள்ளது . இவ்வாறு உருவாக்கப்படும் புதிய தொழில்நுட்பம் மூலம் அதிவேக இணையம் உறுதி செய்யப்படுகின்றது அதுமட்டுமல்லாது தகவல் தொடர்பாடலில் ஏற்படுகின்ற நேர தாமதமும் குறைக்கப்பட்டுள்ளது.இவற்றிற்கு மேலாக VR, IOT போன்ற பல்வேறுபட்ட புதிய தொழில்நுட்பங்கள் இதற்கான ஒரு பாதையையும் இந்த 5G தொழில்நுட்பம் உருவாக்கி உள்ளது. இத்தனை வசதிகள் இத்தனை அபிவிருத்திகள் இவை அனைத்தையும் கண்ட பின்னும் விஞ்ஞானம் தனது தேடலை நிறுத்தவில்லை 5G தொழில்நுட்பத்திற்கு அப்பால் இன்னுமொரு தொழில்நுட்பத்தின் நோக்கிய ஆராய்ச்சிகளில் இன்னமும் ஈடுபட்டுகொண்டுதான் இருக்கின்றது இந்த விந்தை கொண்ட விஞ்ஞானம்.
-அடையாளம்-

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction