புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடையே முடி உதிர்தலை இயல்பாக்குவதற்காக, உலகின் மிகவும் பிரபலமான காட்டூன் கதாபாத்திரங்களுக்கு தாங்கள் ஒரு புதிய தோற்றத்தை அளித்ததாக Ogilvy எனும் முன்னணி விளம்பர மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நிறுவனம் தெரிவிக்கிறது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த GRAACC (Grupo de Apoio ao Adolescente e à Criança com Câncer) எனும் ஒரு முன்னணி அமைப்பு; குழந்தைப் பருவம் மற்றும் இளம்பருவ புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற குழந்தை மருத்துவமனையை நிர்வகித்து, பராமரிக்கிறது. இந்நிறுவனத்திற்காக பிரேசிலில் இயங்கும் Ogilvy நிறுவனம் 2014ஆம் ஆண்டு உருவாக்கிய ''Bald Cartoons'' எனும் காணொளி அண்மைய நாட்களில் பிரபலமாகியுள்ளது,
குழந்தைகள் அதிகம் விரும்பி பார்க்கும் சில காட்டூன் கதாபாத்திரங்களை கேசம் அற்ற முகங்களாக மாற்றி உலகெங்கிலும் உள்ள அனிமேட்டர்களுடன் இணைந்து புதிய காமிக்ஸ்களையும் அத்தியாயங்களையும் உருவாக்கியது. சக குழந்தைகளிடமிருந்து வேறுபாட்டையும் தனிமையையும் உணரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது,
இந்த விழிப்புணர்வு விளம்பரம் ஏற்படுத்திய மாற்றம் இன்றுவரை பேசப்படுவதுடன் கேன்ஸ் லயன் கோல்ட் விருதையும் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.