website analysis

28 வருடங்களாக நடந்தே உலகைச்சுற்றியவர் வீடு திரும்பிய அழகான தருணம்!

வினோதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 உலகின் மூலைகளுக்கேல்லாம் பறந்து சென்று சுற்றி வந்திருப்போம். இங்கே ஒருவர் எந்தவிதமான போக்குவரத்து வாகனங்களையும் பயன்படுத்தாமால் தன் இரு கால்களை மட்டும் நம்பி உலக நாடுகளுக்கு பயணித்திருக்கிறார்.

கடந்த நவம்பர் 2ஆம் திகதி தனது பயணத்தை நிறைவு செய்து தாய்நாட்டுக்கு திரும்பிய Karl Bushby என்பவரை அவ்வூர் மக்கள் அமோகமாக வரவேற்று கொண்டாடினர்.

1998ஆம் ஆண்டு இங்கிலாந்தின் 'ஹல்' எனும் தனது சொந்த ஊரிலிருந்து Karl Bushby என்பவர் தன் பயணத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு 29 வயது. 

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள பெரிங் நீரிணையைத் கடந்தது முதல், ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தது வரை, தனது பயணத்தின் போது அவர் பல அசாதாரண சவால்களை எதிர்கொண்டார். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்து பயணித்தார். 

50,000 கிலோமீட்டர் (31,000 மைல்கள்) தூரம் நடந்த பிறகு, புஷ்பி தனது வியக்கத்தக்க பயணத்தை 2026-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

28 ஆண்டுகளாக நடந்தே பயணித்த புஷ்பி இறுதியாக ஹல் (Hull) நகரத்திற்கு வந்தடைந்தடைந்தார். அந்நகர மேயர் (Lord Mayor) அவருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பளித்ததோடு அங்கு கூடியிருந்த உள்ளூர்வாசிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். 

தனது தாயாருடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சியான தருணங்கள் முதல் பயணித்த பாதைகள் உள்ளிட்ட காணொலிகள் சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்