கத்தோலிக்கத் திருச்சபையின் புனித பாப்பரசரான போப் பிரான்சிஸ் மறைந்தார் . நேற்று ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது, செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் தோன்றி, அருளாசிகள் நல்கிய அவர், இன்று காலையில் உயிர் நீத்தார் எனும் செய்தியை, வத்திகான் செய்திகள் X தளத்தில் பதிவு செய்துள்ளதை மேற்கோள் காட்டி ஐரோப்பியச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
88 வயதான போப் பிரான்சிஸ், மார்ச் 13, 2013 அன்று போப்பாண்டவராக திருச்சபையின் அரியணையில் ஏறினார். அர்ஜென்டினாவைச் சேர்ந்த அவர் திருச்சபையின் அரியணை ஏறிய அமெரிக்க கண்டத்தின் முதல் பிரதிநிதியாவார்.
சுவாசப் பிரச்சினைகள் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி என்பவை காரணமாக, பிப்ரவரி நடுப்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை தேறியிருந்த நிலையில், உயிர்த்த ஞாயிறின் பின்னதாக, இன்று காலை அவர் அமரத்துவம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.