free website hit counter

இத்தாலிக்குப் பயணம் செய்பவர்களுக்கு, இந்தியத் தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசியினை அங்கீகரித்தது இத்தாலியின் சுகாதார அமைச்சு. இது இந்தியாவிலிருந்து இத்தாலிக்கு வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகவுள்ளது.

ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க சுவிட்சர்லாந்து ஒப்புக்கொண்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் தொற்று நோயியல் தொடர்பான வாராந்திர செய்தியாளர் மாநாட்டின் வரிசையில், நேற்று நடந்த சந்திப்பில், சுவிஸ் கூட்டமைப்பு வல்லுநர்கள் நாட்டின் தொற்றுநோயியல் போக்கின் நிலைமையை விவரித்தனர்.

இத்தாலியின் தடுப்பூசி திட்டத்தின் மூன்றாவது டோஸ் வழங்கும் ஆரம்பநாளில், நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ள 6,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு, வழங்கப்பட்டுள்ளன.

சுவிற்சர்லாந்துக்குள் வான், தரை, வழியாக வரும் எந்தப் பயணிகளும், கோவிட் சான்றிதழுடன் மட்டுமே நுழைய முடியும் என்பதை சுவிஸ் அரசு உறுதி செய்தது. வரும் திங்கட் கிழமை முதல் சுவிற்சர்லாந்துக்குள் இது நடைமுறைக்கு வருகிறது.

சுவிற்சர்லாந்தில் செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து நுழைவு விதிகளை கடுமையாக்குவதற்கு மத்திய கூட்டாட்சி அரசு ஆலோசித்துள்ளது. இதற்கான ஆலோசனைகளை ஏற்கனவே மாநில அரசுகளிடம் கலந்துரையாடியுள்ள மத்திய அரசு, இன்றைய கூடலில், இது தொடர்பான இறுதி முடிவினை அறிவிக்கவுள்ளது.

இத்தாலியில் வரும் அக்டோபர் 15 முதல், அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் செயலாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ' தடுப்பூசிச் சான்றிதழ்' தேவை கட்டாயமாகிறது. இத்தாலியை "பாதுகாப்பு நிலையில்" வைத்திருக்கும் நடவடிக்கையாக இத்தாலியப் பிரதமர் இதனை இன்று அறிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …