இந்தியாவில் தனி மனித சுதந்திரம் இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மொபைல் போன் 20 வருடமாக ஒட்டுக்கேட்க படுவதாக குற்றம் சாட்டினார்.
இந்திய அளவில் ஒட்டு கேட்கப்படும் 50 தலைவர்களில் நான் ஒருவனாக இருந்தேன் எனவும் சீமான் கூறியுள்ளார். தமிழகத்தில் தன்னுடையது எல்லா தொலைபேசி பேச்சுக்களும் ரொம்ப நாளாக ஒட்டு கேட்கப்படுகிறது எனவும் இந்த நாட்டில் தனி மனித சுதந்திரம் இல்லை என்றையும் குறிப்பிட்டார்.