மஹாத்மா காந்தி, நேரு, படேல், அம்பேத்கர் ஆகியோரிடம் பயத்தை நட்பாக்கி கொள்வது பற்றியும், தைரியமாக இருப்பதையும் கற்றுக் கொண்டேன் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ஆபத்தான காலகட்டத்தில் புன்னகையுடன் நடந்து சென்று வலிமையுடன் திரும்பி வந்தவர் நேரு என குறிப்பிட்டார். முன்னாள் இந்திய பிரதமர் நேரு பயத்தை எதிர்கொள்ளவும், உண்மைக்காக
நிற்கவும் கற்றுக் கெடுத்தார் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
அறிவியல், கலை, எதிர்ப்பு போன்ற எந்தவொரு முயற்சியும் பயத்தை எதிர்கொள்வதில் இருந்து துவங்குகிறது என்றும் அஹிம்சையில் நீங்கள் உறுதியுடன் இருந்தால், உண்மை தான் உங்களின் ஆயுதம் ஆக இருக்கும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார். உண்மை சிரமம் ஆகிவிட்ட சகாப்தத்தில், எவ்வளவு விலை கொடுத்தலும் உண்மைக்காக உறுதியுடன் நிற்பேன் என்றும் உண்மையான தலைமை என்பது கட்டுப்பாட்டை பற்றியது அல்ல இரக்கத்தைப் பற்றியதாகவும் ராகுல் காந்தி கூறினார்