தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருமாவளவன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஏதோ நாம் திமுகவை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
எல்லா கதவுகளையும் திறந்து வைத்து இருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது எல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை என குறிப்பிட்டுள்ள திருமாவளவன், அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல் என சாடியுள்ளார்.
எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்று சொன்னால் அதற்கும் ஒரு துணிச்சல், தெளிவு, தொலைநோக்கு பார்வை வேண்டும் எனவும் விசிக பிற அரசியல் கட்சிகளை போல் இல்லாமல், ஒரு முன் மாதிரியாக இயங்கக் கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது என்றும் திருமாவளவன்
தெரிவித்துள்ளார்.