பெங்களூரில் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை செய்யும் திட்டத்தை பெருநகர பெங்களூரு மாநகராட்சி தொடங்கியுள்ளது.
வீடு வீடாகச் சென்று மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் வகையில், "டாக்டர்ஸ் யுவர்ஸ் டோர்ஸ்டெப்" என்ற பெயரில் மருத்துவக் குழு ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெங்களூரில் உள்ள 54 பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.
ஒவ்வொரு குழுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 50 வீடுகளுக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவர், ஒரு முதலுதவி அளிப்பவர் இருப்பர். இந்த திட்டத்தின் மூலம் பெங்களூரில் உள்ள 27 லட்சம் குடும்பங்களுக்கு நேரடியாக வீடுகளுக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மக்களிடம் இருந்து கொரோனா பயத்தை போக்கி தன்னம்பிக்கையை ஏற்படுத்த மாநகராட்சி முயற்சி செய்து வருகிறது.