free website hit counter

பராலிம்பிக் வீரர்களை சந்திக்கும் பிரதமர்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பராலிம்பிக்கில் இந்த வருடம் இந்தியா சார்பாக 54 வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதில் 2004 மற்றும் 2016 இல் தங்கம் வென்ற ஈட்டி எரிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா வும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி இன்று, திங்கள்கிழமை இந்தியாவின் டோக்கியோ பாராலிம்பிக் குழுவுடன் உரையாட உள்ளார். இந்த சந்திப்பு காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஒன்பது விளையாட்டு துறைகளைச் சேர்ந்த பரா-தடகள வீரர்கள் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக டோக்கியோவுக்குச் செல்கின்றனர். பராலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொள்ளும் மிகப்பெரிய அணி இதுவாகும். மேற்படி சந்திப்பின் போது மத்திய விளையாட்டு அமைச்சரும் இருப்பார், ”என்று பிஎம்ஓ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பராலிம்பிக் போட்டிகள் வரும் செப்டம்பர் 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் பிரதமர் இந்த சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction