சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன் என்றும் சின்னம் கிடைத்தவுடன் களத்தில் இறங்கி விடுவேன் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உரிமையை பறிகொடுத்து விட்டு புலம்புவது அவுட் ஆப் கண்ட்ரோல் இல்லை என கூறினார்.
எல்லாவற்றையும் நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்றால், சட்டசபை, பார்லிமென்ட் எதற்கு? என கேள்வி எழுப்பிய சீமான், மாநில உரிமைகளை பறித்துக் கொண்டு போன கட்சியிடமே கூட்டணி வைத்துக் கொண்டு மாநில உரிமையை பேசுவது கேலிக் கூத்தானது என விமர்சனம் செய்தார்.