அமெரிக்காவில் விசா ரத்து செய்யப்பட்ட சர்வதேச மாணவர்களில் 50 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுங்க மற்றும் குடியேற்றத்துறை, வெளிநாட்டு மாணவர்கள் குறித்து ஆய்வு செய்ததில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதே அதற்கு காரணம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாத 327 வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 50 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ள அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கம் சீனா தென்கொரியா, வங்கதேசம் மற்றும் நேபாளத்தை சேர்ந்த மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டு
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.