அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி உறுதியான கூட்டணி என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டில் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.
கவர்னரை தபால்காரர் எனக் கூறுவது தமிழக முதல்வருக்கு அழகல்ல என்றும் சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் அதற்கான பணிகளை செய்வதற்கான நேரம் குறைவாக உள்ளதாக தெரிவித்தார். தான் எந்த யாத்திரையும் மேற்கொள்ள திட்டம் தீட்டவில்லை எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.