நமது எதிரிகளின் முகம் மட்டும் தான் மாறி உள்ளது, அவர்களின் எண்ணமும், உள்ளமும் மாறவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், நீதிக் கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான் திமுக ஆட்சி என்றும் இங்கு இருப்பவர்கள் அனைவரும் வாரிசுகளே எனவும் குறிப்பிட்டார்.
வாரிசு என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு பற்றி எரிகிறது என குறிப்பிட்ட ஸ்டாலின், அவர்களுக்கு எரியட்டும் என்பதற்காகதான் திரும்ப சொல்கிறோம் என தெரிவித்தார். டில்லியின் ஆதிக்க மனோபாவம் மாறவில்லை என்றும் நமது போராட்டமும் ஓயவில்லை என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர், நமது எதிரியின் முகம் மாறி உள்ளது, அவர்களின்
எண்ணமும் உள்ளமும் மாறவில்லை என குறிப்பிட்டார்.