சாதிவாரி கணக்கெடுப்புக்கான திட்டத்தை வடிவமைக்க உதவ தயாராக உள்ளோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
புதுடில்லியில் நிருபர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த செய்வோம் என நாடாளுமன்றத்தில் தாங்கள் தெரிவித்து இருந்தோம் என்றும் இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் என செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள சுவற்றை அகற்றுவோம் எனக்கூறி இருந்தோம் எனவும் கூறினார். நான்கு சாதிகள் மட்டுமே
இருப்பதாக பிரதமர் மோடி கூறி வந்த நிலையில், 11 ஆண்டுக்கு பிறகு அறிவிப்புக்கு பின்னால் என்ன உள்ளது என புரியவில்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவளிப்போம் என கூறிய ராகுல்காந்தி அதற்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என கூறினார். சாதிவாரி கணக்கெடுப்பில் தெலுங்கானா மாநிலம் முன்மாதிரியாக உள்ளது என்றும் அதற்கான விரிவானதிட்டம் அம்மாநிலத்திடம் உள்ளது என்றும் கூறிய ராகுல்காந்தி சாதி வாரி கணக்கெடுப்புக்கான
திட்டத்தை தயாரிக்க நாங்கள் உதவ தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.