free website hit counter

இந்தியாவுக்கு ஆயுத தளவாடங்கள் விற்பனை - அமெரிக்கா ஒப்புதல்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவுக்கு 11 ஆயிரம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கி உள்ளது.

பெண்டகனின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு(DSCA) தளவாடங்கள் விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியதுடன், அது குறித்து அந்நாட்டு பார்லிமென்டில் தெரிவித்து உள்ளது. sea-vision software, remote software,
analytic support மற்றும் அதுசார்ந்த தளவாடங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்பு கொண்டு உள்ளது.

இந்த தளவாடங்களினால், இந்தியாவின் பாதுகாப்பு அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் ஏற்படும் அச்சறுத்தல்களை எதிர்கொள்ள முடியும் என பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ள நிலையில், இந்த
தளவாடங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula