பஹல்காமில் இந்திய மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்துள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா, பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்து கொள்ளாது
என்பதை அனைவருக்கும் உறுதியளிக்கிறேன் எனவும் நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி. அது நிச்சயம் நிறைவேறும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தக் கோழைத்தனமான தாக்குதலை அவர்களின் வெற்றியாக பார்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் எனவும் நாட்டின் எந்த மூலையிலும் பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும் அமித்ஷா கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கின்றன எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை, எங்கள் போராட்டம் தொடரும், பயங்கரவாதச் செயல்களை செய்தவர்களுக்கு நிச்சயமாக தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று மீண்டும் நான் உறுதியளிக்க விரும்பிகிறேன் என கூறிய அமித்ஷா, இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என தெரிவித்தார்.