free website hit counter

காஷ்மீர் எல்லையில் போர் மேகம்? - பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் ஆலோசனை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சந்தித்தார்.

பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், நடந்த இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

பிரதமர் மோடி உடனான இந்தச் சந்திப்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாக தேசிய மாநாடு கட்சி எக்ஸ் தள பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது. இதனிடையே, இந்திய கடற்படையின் ஊடக பிரிவு புதிய படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்ப்பல், துருவ ரக ஹெலிகாப்டர், ஸ்கார்பின் ரக நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஒன்றாக
அணிவகுத்துள்ளன.

இந்த நிலையில் எல்லையில் இந்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) முகாம்களில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக வைதகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர்கள் தப்பிப்போக வாய்ப்பில்லை என இந்திய ராணுவம்
தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு தடை.  இந்தியா அடுத்தடுத்து வைத்த "செக்" .

பாகிஸ்தானில் இருந்து அனைத்துவிதமான இறக்குமதிகளுக்கும் தடை என்ற உத்தரவை இந்தியா பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே, அங்கிருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு தடை என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரைவழி, வான்வழி என எந்த விதத்திலும் பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்கள் ஊக்குவிக்கப்படாது
என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிகிறது.

பல்வேறு தடை செய்யப்பட்ட பொருட்களும், ஆயுத உதிரி பாகங்களும் பார்சல்கள் என்ற பெயரில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வருவதாக உளவுத்துறைக்கு தகவல்கள் வந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எல்லா வகையிலும் பாகிஸ்தான் தனித்துவிடப்பட்டு இருந்தாலும் சீனா உள்ளிட்ட சில நாடுகள் வழங்கி வரும் மறைமுக ஆதரவே பாகிஸ்தானின் தவறான போக்கிற்கு காரணம் என
போருக்கு எதிராக குரல் கொடுப்போர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா தற்போது இந்தியா - பாக். விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தொடங்கியுள்ளது.இரு நாடு​களின் வெளி​யுறவுத் துறை அமைச்​சர்​களு​டன் அமெரிக்க வெளி​யுறவுத் துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ 2 நாட்​களுக்கு முன்​னர் தொலைபேசி​யில் பேச்​சு​வார்த்தை நடத்தி உள்​ளார் என அமெரிக்க வெளி​யுறவுத் துறை செய்​தித்
தொடர்​பாளர் டாமி புரூஸ் தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula