பயங்கரவாதத்தை தொடர்ந்து ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதுடன் அந்நாட்டிற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல், முன்னாள் தலைவர் சோனியா, எம்.பி., பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மறக்க முடியாத அத்துமீறல் நடந்த இந்த நேரத்தில், அரசியல் செய்வதற்கு இது நேரம் இல்லை என்பதை காங்கிரஸ் நம்புகிறது எனவும் அரசியல் பிரிவினையை தாண்டி, இந்தியா ஒற்றுமையுடன் உள்ளதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும்
இதுவே சரியான நேரம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.