இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
மானிய விலை மற்றும் பொதுப் பிரிவு வாடிக்கையாளர்களுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.உஜ்வாலா திட்டத்தின் கீழ் 14.2 கிலோ எல்பிஜியின் விலை 500லிருந்து 550 ஆகவும், உஜ்வாலா அல்லாத பயனர்களுக்கு 803 ரூபாயில் இருந்து 853 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு திங்கள் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஒரு சிலிண்டர் ரூ.50 உயர்வு என்பது, உஜ்வலா பயனாளிகளுக்கும், உஜ்வலா அல்லாதவர்களுக்கும் சமமாகவே பொருந்தும் எனவும் இந்த விலை மாற்றம் ஒவ்வொரு 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை நடைமுறையில் உள்ள முறைப்படி மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை ஆகஸ்ட் 2024 முதல் இப்போது வரை மாற்றமின்றி இருந்தது. இப்போது தான் அதில் முதன்முறையாக ரூ.50 உயர்வு ஏற்பட்டுள்ளது.