பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், போரின் போது அமல்படுத்தப்படும் மின்வெட்டு ஒத்திகை பஞ்சாபின் பெரோஸ்பூரில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்த பகுதியில், நேற்றிரவு 9:00 மணி முதல் 9:30 மணி வரை மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. முன்னதாக, மின்சாரவாரியம் சார்பில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதனால் எல்லையோர பகுதி மக்களிடம் போர் பதற்றத்துடன் வீடுகளுக்குள் முடங்கினர். பாதுகாப்பு காரணங் களுக்காகவே மின் வெட்டு ஒத்திகை நடத்தப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.