காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது வருகிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ள நிலையில், ஜம்மு அருகே ராம்பன் மாவட்டத்தில் செனாப் நதியில் உள்ள பக்லிஹார் அணை நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீரில் ஜீலம் நதியில் உள்ள கிஷன்கங்கா அணை நீர் வெளியேற்றமும் நிறுத்தப்பட்டது.
நீர்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள இங்கு, அணையின் அனைத்து ஷட்டர்களும் மூடப்பட்டன. இரு அணைகளின் நீர் வெளியேற்ற நேரத்தை ஒழுங்குபடுத்தும் அனுமதி இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கிஷங்கங்கா அணையில் இருந்து ஜீலம் நதி நீரை வெளியேற்றுவதை நிறுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.