தமிழ்நாடு முதலமைச்சருக்கு குற்றங்களை தடுக்கும் நிர்வாகத் திறன் என்பது தான் துளியும் இல்லையே? என்று அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டாலின் மாடல் தி.மு.க., ஆட்சியில் பொது இடங்கள் எல்லாவற்றிலும் 'இது மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல!' என்று பதாகைகள் வைக்கப்பட வேண்டும் என்ற அளவில் தான் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு இருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சனை, குற்றவாளிகள் கைது என்ற உங்கள் Template பதில்களைக் கேட்கும் மக்களின் காதுகள் பாவமில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், சட்டம்- ஒழுங்கு' என்பது கைது செய்வது மட்டுமல்ல; குற்றங்களைத் தடுக்க, குற்றத்தை செய்யவே குற்றவாளிகள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு அரசின் காவல் அமைப்பு வலுவாக இருக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
'குற்றவாளிகளின் கூடாரம்' என்ற நிலையில் இருந்து மாறி மீண்டும் 'அமைதிப் பூங்கா' என்ற நிலைக்கு தமிழகம் மாற, தி.மு.க., ஆட்சி வீழ்ந்து, தமிழ்நாடு மாடல் அ.தி.மு.க., ஆட்சி அமைவது ஒன்றே வழி என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.