காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜக வை தோற்கடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தின் மோடாசா நகரில் , காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் பேசிய அவர்,தற்போது நடப்பது அரசியல் ரீதியிலான போராட்டம் மட்டும் அல்ல குறிப்பிட்டார்.
மேலும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றால், காங்கிரசால் மட்டுமே முடியும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் பா.ஜ.,வையும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையும் தோற்கடிக்க வேண்டும் என்றால், அது குஜராத் வழியாகதான் நடக்கும் என ராகுல் காந்தி குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி குஜராத்தில் தான் துவங்கப்பட்டது என்பதால் இம்மாநிலம் மஹாத்மா காந்தி மற்றும் சர்தர் படேல் என்ற மாபெரும் தலைவர்களை இம்மாநிலம் அளித்தது என தெரிவித்த ராகுல் காந்தி, எதையும் மாற்ற முடியும் என கூறினார்.