free website hit counter

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு - 90.93% பேர் தேர்ச்சி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
சென்னை,

பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆக உள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. பிளஸ்-1 பொதுத்தேர்வில் மொத்தம் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.36%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 86.99% ஆக உள்ளது. மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் பிளஸ்-1 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகள் 84.97% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவிபெறும் பள்ளிகள் 93.20% தேர்ச்சி பெற்றுள்ளன.

தமிழில் 9 பேர், ஆங்கிலத்தில் 13 பேர், இயற்பியலில் 440 பேர், வேதியியலில் 107 பேர், உயிரியலில் 65 பேர், கணிதத்தில் 17 பேர், தாவரவியலில் 2 பேர், விலங்கியலில் 34 பேர், கணினி அறிவியலில் 940 பேர், வணிகவியலில் 214 பேர், கணக்குப் பதிவியலில் 995 பேர், பொருளியியலில் 40 பேர், கணினிப் பயன்பாடுகளில் 598 பேர், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் 132 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேலும், தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் (96.38%) மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது. 2-வது இடத்தில் ஈரோடு (96.18%), 3வது இடத்தில் கோவை (95.73%), 4வது இடத்தில் நாமக்கல் (95.60%), 5வது இடத்தில் தூத்துக்குடி (95.43%) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.inமற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula