பஹல்காம் தாக்குதலில் பின்னணியில் உள்ளவர்களுக்கும் விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.
தாக்குதல் தொடர்பாக முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உடன் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தக் ஆலோசனை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் பின் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், பஹல்காமில் நடந்த கோழைத்தனமான செயலில் பல அப்பாவி உயிர்களை இழந்தோம் என தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளோம் என கூறிய அவர், விரைவில் துள்ளியமான மற்றும் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படுவதை, தாக்குதலுக்கு காரணமானவர்கள் பார்ப்பார்கள் என கூறினார்.
குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள்க என்றும் விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் நாட்டு மக்களுக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.