website analysis

கோட்டா சிறுவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்: அநுர குமார

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் பிரஜைகளுடனும், பொருளாதாரத்துடனும், சிறுவர்களின் எதிர்காலத்துடனும் விளையாடுகின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா ஏன் நெருக்கடியாக மாறியது என ஜனாதிபதி பணிவாக தன்னை தானே கேட்டுக்கொள்ளவேண்டும். சுய பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.

கொரோனா வைரசினை தாங்களே சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளனர் என ஜனாதிபதியும் அவரது அரசாங்கத்தவர்களும் கருதுவார்கள் என்றால், அது மேலும் கொரோனோ தொற்றிற்கு வழிவகுக்கும்.” என்றுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்