வருடாந்தம் 80 மில்லியன் வர்த்தகம் செய்யும் ஒவ்வொரு வியாபாரமும் அல்லது தொழிற்துறையும் பெறுமதி சேர் வரியில் (VAT) பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் அனைவரும் பார்க்கும் வகையில் VAT பதிவு சான்றிதழ் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று காலை யட்டியந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர், தற்போது வருடத்திற்கு 80 மில்லியனாக VAT செலுத்தும் வரம்பு இருந்தாலும், வருடாந்த வருவாயை 60 மில்லியனாக குறைப்பதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.
VAT பதிவு இலக்கம் காட்சிப்படுத்தப்படாவிட்டால், அவ்வாறு செய்யாதவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.