பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி, ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சரி, எந்தவொரு தேர்தலையும் சந்திக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தேர்தலுக்கும் நாங்கள் தயார். பொதுத் தேர்தலை முதலில் நடத்தினால் அதற்கு நாங்கள் தயார். ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்தினால் அதற்கும் நாங்கள் தயார். அது தொடர்பில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
தேசிய சொத்துக்களை விற்பதற்கு எதிரான அவரது அறிக்கை குறித்து கேட்டபோது, அவர் மட்டுமல்ல, கட்சியின் தொண்ணூற்றொன்பது சதவீதமானவர்களும் அந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என்றார்.
இந்த அரசாங்கத்தின் செயல்திட்டங்களுக்கு SLPP ஒப்புதல் அளிக்காதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த அரசாங்கத்தின் செயல் திட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. அதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. எங்களுக்கு சுதந்திரம் உள்ளது. SLPP க்கு உள்ளது. எந்த நேரத்திலும் எங்கள் கருத்தை தெரிவிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.