free website hit counter

மலையகத்தில் மரக்கறிகளின் விலை திடீர் உயர்வு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மரக்கறிகளின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டது.
மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அந்தவகையில் மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகி போவதற்கான ஆபத்து உள்ளதாக மலையக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் குறித்த நிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது.

தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி காணப்பட்டிருக்கும் ஆனால் இந்த வருடத்தில் இவ்வாறு மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அந்தவகையில் விலை அதிகரித்துள்ள மரக்கறிகளாவது,
லீக்ஸ் ஒரு கிலோ விலை – 200 ரூபாய்
பாகற்காய் ஒரு கிலோ விலை – 200 ரூபாய்
வெண்டிக்காய் ஒரு கிலோ விலை – 190 ரூபாய்
புடலங்காய் ஒரு கிலோ விலை – 180 ரூபாய்
தக்காளி ஒரு கிலோ விலை – 360 ரூபாய்
கோவா ஒரு கிலோ விலை – 320 ரூபாய்
கறிமிளகாய் ஒரு கிலோ விலை – 480 ரூபாய்
கத்திரிக்காய் ஒரு கிலோ விலை – 250 ரூபாய்
நுவரெலியா உருளை கிழங்கு ஒரு கிலோ விலை – 290 ரூபாய்
போஞ்சி ஒரு கிலோ விலை – 600 ரூபாய்
பச்சைமிளகாய் ஒரு கிலோ விலை – 500 ரூபாய்
கரட் ஒரு கிலோ விலை – 440 ரூபாவிலிருந்து 480 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction