website analysis

நாடு மற்றும் அதனை சூழவுள்ள கடற்பரப்புகளில் பருவமழைக்கு முந்தைய காலநிலை காரணமாக, நிலவும் மழை நிலை மேலும் தொடரக்கூடும்.

முள்ளிவாய்க்கால் தாக்குதலின் 15 வருடங்களை நினைவுகூரும் நிகழ்வில் வெள்ளவத்தையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்துவது என்பது முட்டாள்தனமான பைத்தியக்காரத் திட்டம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்ற நிலையில், பொது வேட்பாளர் தொடர்பிலான சம்பந்தனின் நிலைப்பாடு வெளியாகியிருக்கின்றது.

நாடு மற்றும் அதனை சூழவுள்ள கடற்பரப்புகளில் பருவமழைக்கு முந்தைய காலநிலை காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை மீண்டும் காலவரையின்றி தாமதமாகியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி, ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சரி, எந்தவொரு தேர்தலையும் சந்திக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் G.C.E.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான G.C.E. உயர்தர வகுப்புகள் 2024 ஜூன் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

More Articles …