free website hit counter

இன்று (15) பிற்பகல் 1 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளை வெளியிடுவதை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்பு, காலி முகத்திடலில் தொடர்ந்து 5வது நாளாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையின் ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவே இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கும், அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான நேற்றைய கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிந்துள்ளது. ஆயினும் இச் சந்திப்பு மீண்டும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: