free website hit counter

 இஸ்ரேல் ஈரான் மோதலில் இரு வாரக் கெடு விதித்தது அமெரிக்கா !

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா நுழைவதா இல்லையா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் ஒரு முடிவை எடுக்கப்படும் என வியாழக்கிழமை வாஷிங்டனில் இருந்து பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடக்கலாம் என்பது குறித்து கணிசமான வாய்ப்பு உள்ளது " எனவும் குறிப்பிட்டார். 

இதேவேளை நேற்றைய நாளிலும், தொடர்ச்சியான பதிலடித் தாக்குதல்களைத் ஈரானும் இஸ்ரேலும் தொடர்ந்து வருகின்றன. வியாழக் கிழமை அதிகாலை தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனை ஈரானிய ஏவுகணையால் நேரடியாகத் தாக்கப்பட்டது. இத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் அவசர சேவைகள் தெரிவித்தன.

ஈரானின் கன நீர் உலை மீது இஸ்ரேல் தாக்குதல்களை நேற்று  நடத்தியது. இராணுவ தளங்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைக்  கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியிருந்தது. 

இன்று எட்டாவது நாளாகத் தொடரும் இந்த மோதலில், பொது மக்கள் பாதிப்புக் குறித்து, வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைகள் குழு தெரிவிக்கையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 263 பொதுமக்கள் உட்பட குறைந்தது 639 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறியது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் மேற்கொண்ட 400 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வீசியுள்ளது. இத் தாக்குதல்கள் மூலம், இஸ்ரேலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: