free website hit counter

ஈரான் - இஸ்ரேல் இடையில் உடன்பாடு காண இரஷ்யா உதவ முடியும் : விளாடிமிர் புடின்  அறிவிப்பு !

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மத்தியஸ்தம் செய்ய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன்கிழமை முன்வந்தார்.

 இஸ்ரேலிய பாதுகாப்பு கவலைகளை தணித்து, தெஹ்ரான் அமைதியான அணுசக்தி திட்டத்தைத் தொடர அனுமதிக்கும் ஒரு தீர்வைப் பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்த ரஷ்யா உதவ முடியும் என ரஷய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார். 
சர்வதேச செய்தி நிறுவனங்களின் மூத்த செய்தித் தலைவர்களிடம் பேசிய புடின், "இது ஒரு நுட்பமான பிரச்சினை ஆனால்  என் பார்வையில், ஒரு தீர்வைக் காணலாம்" என்று கூறினார் என வாஷிங்டன் ரைம்ஸ் தெரிவித்திருக்கிறது.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனியை இஸ்ரேல் கொன்றால் ரஷ்யா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்று கேட்டதற்கு, புடின் பதிலளிக்க மறுத்தவர்,  "அத்தகைய சாத்தியக்கூறு பற்றி விவாதிக்கக்கூட நான் விரும்பவில்லை" என்று குறிப்பிட்டார். 

இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொண்டு சரணடைய வேண்டும் என்ற அமெரிக்காவின் அழைப்புகளை கொமேனி நிராகரித்ததுடன், அமெரிக்கர்களின் எந்தவொரு இராணுவச் செயற்பாடும் அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்திருந்தார்.

உடன்பாடு காண்பதற்கான யோசனைகளை, ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டதாகவும், "நாங்கள் யாரையும் திணிக்கவில்லை; இந்த சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியமான வழியை நாங்கள் எவ்வாறு பார்க்கிறோம் என்பது பற்றி மட்டுமே நாங்கள் பேசுகிறோம். ஆனால், இந்த முடிவு, நிச்சயமாக, இந்த  நாடுகளின் அரசியல் தலைமையைப் பொறுத்தது, முதன்மையாக ஈரான் மற்றும் இஸ்ரேலின் முடிவுகள் முக்கியமானவை" என்றும் அவர் கூறினார்.

ஈரான் இஸ்ரேல் முறுகல் நிலை 6 நாட்களாக பெரும் வான்வழித் தாக்குதல்களாகத் தொடர்ந்து வருகின்றன. 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: