free website hit counter

உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட இரஷ்ய விமானங்கள் அழிக்கப்பட்டன - உக்ரைன் 

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் ரஷ்யாவின் எல்லைக்குள் 40க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்களை அழித்ததாக உக்ரைனின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

திங்கட் கிழமை துருக்கியின் இஸ்தான்புல்லில்  நேரடி பேச்சுவார்த்தைக்காக  இரு தரப்பினரும் சந்திப்பதற்கு  தயாராகி வந்த நிலையில்  உக்ரைனை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால்  இரஷ்ய எலலைக்குள் இந்தத் தாக்குதலைச் செய்துள்ளது.

தாக்குதல்  விவரங்களை வெளியிட பெயர் வெளியிடாத உக்ரைன் அதிகாரி, இத்தாக்குதல் 18 மாதங்களுக்கும் மேலாக திட்டமிட்டுச் செயல்படுத்தபப்பட்டதாகவும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் நேரடிமேற்பார்வையில் நடப்பட்டது என்றும், இரஷ்யாவின்  ட்ரோன் தாக்குதலுக்கான பதில் தாக்குதல் இதுவெனவும், தெரிவித்துள்ளார். 

இத் தாக்குதல் குறித்து, இரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், தங்கள் நாட்டில் உள்ள நான்கு இராணுவ விமானநிலையங்கள் மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியது,டன், அங்கு பல விமானங்கள் தீப்பிடித்து எரிந்தன என்பதை உறுதி செய்துள்ளது. இத் தாக்குதலை இரஷ்ய அதிகாரிகள் சிலர் "பயங்கரவாத தாக்குதல்கள்" என்று குறிப்பிட்டதாகவும் தெரியவருகிறது. 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: