website analysis

இலக்கித்துக்கான நோபல் பரிசு (2026) கனடிய எழுத்தாளர் - ஆன் கார்சன்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலக்கியத்திற்கான 2026ம் நோபல் பரிசு கனடிய எழுத்தாளரான ஆன் கார்சனுக்கு கிடைத்திருக்கிறது.

இந்தப் பரிசை அறிவிக்கம் குறிப்பில், "செவ்வியல் மரபுடன் விளையாட்டுத்தனமான உரையாடலில் ஈடுபட்டு, சமகால இலக்கியத்திற்குப் புதிய வடிவங்களை உருவாக்கியுள்ள அவரது துணிச்சலான மற்றும் புத்தாக்கமிக்க படைப்புகளுக்காக 2026-ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன் கார்சன், தனது தொழில் வாழ்க்கை முழுவதும், கவிதை எழுதுவதையும், மொழிபெயர்ப்புப் பணியையும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் கற்பிப்பதையும் இணைத்துச் செய்து வந்துள்ளார். அவரது இலக்கியப் படைப்புகள் அனைத்தும், சொற்கள் மீதான மொழியியலாளரின் பேரார்வத்திற்கும், புதிய அர்த்தங்களுக்கான கவிஞரின் வேட்கைக்கும் இடையிலான சந்திப்பை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன. தனது அனைத்துப் படைப்புகளுக்கும் சொற்பிறப்பியல்தான் தொடக்கப் புள்ளி என்று அவரே அடையாளம் கண்டுள்ளார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்