website analysis

விமானி மீதான தாக்குதலை முறியடித்த பயணிகள் !

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி துபாயிலிருந்து  பயணித்த (flydubai - FZ1073) விமானத்தில்,  உதவி விமானி, முதன்மை விமானியை  தாக்கியதில், விமானத்தின் பறத்தல் நிலையில் தடுமாற்றம் ஏற்பட்டடதாகவும், அதனைத் தொடர்ந்து விமானிகளின் அறைக்குள் நுழைந்து விமானப் பணியாளர்களும், சக பயணிகளும், குழப்பம் விளைவித்த உதவி விமானியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் தெரிய வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, குறித்த விமானம் சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  விமானி மீதான இத் தாக்குதல் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடவடிக்கையாக இருக்கலாம் என இஸ்ரேலிய தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்தான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது, நடந்த இந்தத் ாாக்குதல் முயற்சியின் போது, விமானத்தில் சுமார் 180 பேர் பயணித்ததாகவும், அவர்களுள்  150 பேர் வரையில் இஸ்ரேலிய பயணிகள் எனவும் தெரியவருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்