free website hit counter

விருச்சிகம் : மே மாத ராசி பலன்கள்

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மே மாத  விருச்சிக இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:  சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் புதன், ராஹூ, செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சூர்யன், குரு, சுக்ரன்   - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:
01-05-2024 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
07-05-2024 அன்று புதன் பகவான்  பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-05-2024 அன்று சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-05-2024 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
24-05-2024 அன்று புதன் பகவான்  ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-05-2024 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
அனாவசிய செலவுகளை நீக்கி அத்யாவசிய செலவுகளை மட்டுமே செய்யும் விருச்சிக ராசியினரே இந்த மாதம்; வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.
பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
அரசியல்துறையினருக்கு அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். 
மாணவர்களுக்கு  எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.

விசாகம் - 4:
இந்த மாதம் தொழிலில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். வேறு ஊருக்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதால் மறைமுகமான போட்டிகளால் பாதிப்புகள் ஏற்படாது. உடலில் ஏற்படும் சிறிய உபாதைகளுக்கு உடனுக்குடன் வைத்தியம் செய்து கொண்டால் மருத்துவச் செலவுகளை குறைக்கலாம். 

அனுஷம்:
இந்த மாதம் பங்குச் சந்தை போன்ற விஷயங்களில் நல்ல பலன்களை பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்குத் தேவையான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவீர்கள். கவலைகொள்ள வைத்த கடன் தொல்லைகள் குறைவதால், உங்களின் மனதில் தைரியம் பிறக்கும். 

கேட்டை:
இந்த மாதம் புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறியான நிலைமை மாறும். சகோதர, சகோதரிகளிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து குடும்ப ஒற்றுமையை பேணிக்காப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை பெறுவீர்கள். 

பரிகாரம்: ஆறுமுகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி தேய்பிறை: வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: 05, 06

ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான மார்ச் மாதப் பலன்களை உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம். 

 

 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction