யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01.05.2025 இரவு 9 .40 மணியளவில் சிவசாயுச்சியம் பெற்றார்.
இலங்கை தலைநகர்கொழும்பில் வைத்திய சிகிச்சைபெறவந்திருந்த அவர், கொழும்பு வெள்ளவத்தை கம்பன் கழகத்தில் தங்கி இருந்த நிலையில் சாயுச்சியம் பெற்றதாகத் தெரிய வருகிறது. சுவாமிகளின் திருவுடல் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஆதீனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அன்று ( 02.05.2025) மாலை பூரணத்துவ சாந்தி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது.
நல்லை ஆதீனத்தைத் தோற்றுவித்த முதலாவது குருமுதல்வர், ஶ்ரீலஶ்ரீ சுவாமிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 11-04-1981இல் பூரணத்துவம் பெற்றதன் பின்னதாக, நல்லை ஆதீனத்தின் குருமுதல்வராக வீற்றிருந்து அறமாற்றிய சுவாமிகள், யுத்த காலத்திலும் தன்னாலான பணிகளைச் சிறப்பாக ஆற்றி வந்தவர். சிறந்த மனிதநேயப் பண்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.