free website hit counter

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71 ஆம் பீடாதிபதி !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71 ஆம் பீடாதிபயாக கணேஷ சர்மா திராவிட் அவர்கள் சந்நியாச தீட்சை பெற்று, ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளாக எழுந்தருளினார்.

கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற பூர்வாங்க கிரிகைகளின் நிறைவாக, இன்று காலை காஞ்சி காமாட்ச்சி அம்மன் ஆலய திருக்குளப் பிரகாரத்தில் நடைபெற்ற, விஷேட சந்நியாச தீட்சை வழங்குதல் இடம்பெற்றது. இதனைத் தற்போதைய பீடாதிபதி, ஶ்ரீ விஜேயேந்திர சந்திசேகர சரஸ்வதி ஸ்வாமிகள்  நடத்தி வைத்தார்கள். 

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71 ஆம் பீடாதிபதியாக, ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று பொறுப்பேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எனது நல்வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நமது நாட்டின் ஆன்மீக மேம்பாட்டிலும், சமூக மேம்பாட்டிலும் பெரும்பங்கு வகிக்கும், தொன்மையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி சங்கர மடத்தின் மேலான பணிகளை, மேலும் பல நூற்றாண்டுகள் கொண்டு செல்ல, இளைய மடாதிபதி ஶ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் நிச்சயம் பெரும்பங்கு வகிப்பார்கள், என பாஜக தலைவர்களில் ஒருவரான திரு. அண்ணாமலை அவர்கள் தனது வாழ்த்துக் குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula