free website hit counter

சுவிற்சர்லாந்தில் நடைமுறையிலுள்ள கோவிட் பெருந்தொற்று பாதுகாப்பு விதிமுறைகளிலிருந்து பல மாநிலங்கள் விரைவாக வெளியேற விரும்புகின்றன.

கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றான, வெளிப்புற முகமூடி தேவையை வெள்ளிக்கிழமை முதல் இத்தாலி முடிவுக்கு கொண்டுவருவதாக இத்தாலிய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று உறுதிப்படுத்தியது. ஆ

இத்தாலியிலும் கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்தும் சில நடவடிக்கைகளை இத்தாலிய அரசாங்கம் புதன்கிழமை மாலை உறுதிப்படுத்தியது.

சுவிற்சர்லாந்து அரசு பல கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்துவதாகவும், பெப்ரவரி இறுதிக்குள் அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிடுவதற்கான இரண்டு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.

இத்தாலியின் புதிய ஜனாதிபதியாக, கடந்த சனிக்கிழமையன்று முன்னாள் ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார். 80 வயதாகும் மெட்டரல்லாவின் தெரிவு, இத்தாலியில் பலவாரங்களாக நிலவிய அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

சுவிற்சர்லாந்தில் கோவிட் பெருந்தொற்றின் அச்சம் பொது மக்கள் மத்தியில் குறைந்து வரும் நிலையில், நாளை ஆரம்பமாகும் பெப்ரவரி மாதத்தில் பல பதிவுத் திருமணங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகிறது.

"நாங்கள் இன்னும் ஆபத்தில் இருந்து மீளவில்லை," என்று சுகாதார இயக்குநர்கள் மாநாட்டின் (சிடிஎஸ்) தலைவர் லூகாஸ் ஏங்கல்பெர்கர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்கு முன் காத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …