free website hit counter

சுவிற்சர்லாந்தில் வேகமாகப் பரவி வரும் கோவிட் பெருந்தொற்றுக்களுக்கு எதிரான, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு புதன்கிழமை முடிவு செய்துள்ளது. இருப்பினும் நிலைமை தொடர்ந்து மோசமடைந்தால் மட்டுமே மூடுதல் உட்பட கடுமையான நடவடிக்கைகள் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நத்தார், புதுவருடக் கொண்டாட்டங்களின் பின்னதாக, எதிர்பார்த்ததைவிடவும் அதிகமான கோவிட் தொற்றுக்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸ் புதிய தினசரி கோவிட் தொற்றுக்களாக 270,000 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் பண்டிகைக் காலத்தின் பின்னதாக நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக உள்ளது.

சுவிற்சர்லாந்தின் அனைத்து மாநிலங்களிலும், ஐம்பது சதவீத மக்கள் ஒரு சில வாரங்களில் கொரோனா வைரஸைக் கொண்டிருக்கலாம் என கோவிட்-19 பணிக்குழு உறுப்பினர் ரிச்சர்ட் நெஹரின் எதிர்வு கூறியுள்ளார்.

இத்தாலியின் தினசரி கொரோனா வைரஸ் தொற்று விகிதம் வியாழக்கிழமை 100,000 என்ற குறியீட்டு மைல்கல்லைக் தாண்டியது. தலைநகர் ரோமிலுள்ள கோவிட் மருத்துவமனை நோயாளிகளால் நிரம்பியது.

சுவிற்சர்லாந்தில் நேற்று புதன்கிழமை 17,634 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை தொற்றுக்கள் வேகமாக அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

சுவிற்சர்லாந்தில் நேற்று செவ்வாயன்று 13,375 புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பொது சுகாதார அலுவலகத்தின் (FOPH) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction