கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க பல்வேறு கட்சிகள் சட்டசபையில் கோரிக்கை வைத்தனர். பா.ம.க., தலைவர் மணி பேசுகையில், காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களில் பல்கலைக்கழகம் உள்ள நிலையில் கருணாநிதி பெயரில் பல்கலை கழகம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்து அவர் சட்டசபையில் பேசுகையில், ''கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி என்றும் கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.