காஷ்மீர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும் என்றுதான் நாங்கள் கூறியிருக்கிறோம் என குறிப்பிட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எந்த காரணத்தைக் கொண்டு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது என்று
தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய அவர், காஷ்மீர் தொடர்பான பிரச்சினையைப் பொறுத்தவரையிலே, மத்திய அரசு எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையாக இருந்தாலும், தமிழ்நாடு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார். எந்த காரணத்தைக்கொண்டும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதவாதம், உள்ளே நுழைய
முடியாது, என்பதை நான் தெளிவோடு சொல்லிக் கொள்கிறேன் என்று கூறிய முதலமைச்சர் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது? என கேள்வி எழுப்பினார்.