free website hit counter

தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது! பிரதமர் மோடி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாடு முழுவதும் சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது, நாட்டு மக்களுக்கு தீபாவளிப் பரிசு காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசியதாவது:

”சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பியுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். விரைவில் இந்தியா சொந்தமாக விண்வெளியில் ஆராய்ச்சி மையத்தை அமைக்கும். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான நேரம் வந்துவிட்டது. இந்த சீர்திருத்தத்தால் சிறு, குறு தொழில்கள் பயனடையும். சீர்திருத்தத்துக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்.

ஏழை, விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான நிதி மேம்படுத்தப்படும். லட்சாதிபதி பெண்களின் எண்ணிக்கை 2 கோடியில் இருந்து மூன்று கோடியாக உயரும். வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் 3.5 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள். இளைஞர்களுக்காக ஒரு லட்சம் கோடியில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

விவசாயிகள், மீனவர்களின் நலனில் ஒருபோது சமரசம் செய்து கொள்ளப்படாது. மக்களுக்காக செயல்படுவதே அரசு, அதை நோக்கியே பயணிக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula