குருகிராம் நில வழக்கு தொடர்பாக தொழிலதிபர் ராபர்ட் வாத்ரா, தனது மனைவியும், வயநாடு எம்.பி.,யுமான பிரியங்காவுடன் வந்து அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.
கடந்த 2018ல் குருகிராமில் உள்ள 3.5 ஏக்கர் நிலம் வாங்கி விற்றதில் இரு நிறுவனங்கள் இடையே சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்ததாக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.,யுமான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை இருமுறை சம்மன் அனுப்பியும், வாத்ரா ஆஜராகாமால் இருந்து வந்தார்.இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த சூழலில்,செவ்வாய், புதன் மற்றும் வியாழன் அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ராபர்ட் வாத்ரா ஆஜரானார். அவருடன் பிரியங்காவும் வந்திருந்தார்.முதல் இண்டு நாட்களில் 12 மணிநேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாஜக தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள் மீது வழக்கு தொடுப்பதையே தொழிலாக வைத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.